2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

Administrator   / 2016 மார்ச் 13 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடியோடைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேக நபர்களையும் நேற்று சனிக்கிழமை (12) பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.ஆர்.பி.சேனநாயக தெரிவித்தார்.

சட்ட விரோதமான முறையில் மேற்படி பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து, மாவடியோடைப் பகுதியில்; மேற்கொண்ட சோதனை நடவடிக்கையை அடுத்தே, குறித்த சந்தேக நபர்களை; மூவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், மணல் ஏற்றிச் செல்ல பயன்படத்தாப்பட்ட மூன்று டிப்பர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் கடத்தலுக்கு பொலிஸார் உடந்தையாக இருப்பதாக, செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விவசாயக் கூட்டத்தில் புவிசரிதவியல் கனியவளங்கள் திணைக்களத்தினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--