2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தென்கிழக்குப் பல்கலை கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல்.மப்றூக்,எம்.எஸ்.எம்.ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா

தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நேற்று வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய சகல பல்கலைக்கழகங்களிலும் கல்விசார ஊழியர்களால் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிணங்க, குறித்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களின் சம்பள முரண்பாடு, ஓய்வூதியம் மற்றும் ஏனைய பல விடயங்கள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து, வேலைநிறுத்தத்தில் தாங்கள் இறங்கியுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் வை.முபாரக் தெரிவித்தார்.

ஊழியர்களின் கோரிக்கைகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உயர்கல்வி அமைச்சும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும், கோரிக்கைகள் தொடர்பில்  கவனம் செலுத்தாது விடின் எதிர்காலத்தில் தொடர்சியான  போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்  சங்கத்தின் தலைவர் முபாரக் சுட்டிக் காட்டினார்.
                                                                                                                                                                                                               


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X