Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 13 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று புதன்கிழமை (13) ஒலுவில் வளாகத்தில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய சகல பல்கலைக்கழகங்களிலும் கல்விசார ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிணங்க, குறித்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமையும் நாளை 14 வியாழக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத் தலைவர் வை. முபாறக் தெரிவித்தார்.
ஊழியர்களின் சம்பள முரண்பாடு, மாதாந்தக் கொடுப்பனவு, ஓய்வூதியம் மற்றும் ஏனைய பல விடயங்கள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து, வேலைநிறுத்தத்தில் தாங்கள் இறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊழியர்களின் கோரிக்கைகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உயர்கல்வி அமைச்சும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும், கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாது விடின் எதிர்வரும் 27ஆம் திகதி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சுட்டிக் காட்டினார்.
5 hours ago
5 hours ago
20 Oct 2025
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
20 Oct 2025
20 Oct 2025