2021 மே 12, புதன்கிழமை

திருமலை, அம்பாறை வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் குழுவினர்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எஸ்.ஜமால்டீன்

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள  வைத்தியசாலைகளுக்கு சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் தலைமையிலான குழுவினர் வருகைதந்து அங்குள்ள குறைநிறைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக  பிரதியமைச்சரின் விசேட ஆலோசகரும் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமையும் (10) அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (11) இக்குழுவினர் வருகை தரவுள்ளனர்.

வைத்தியசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை,  உட்கட்டமைப்பிலுள்ள குறைபாடுகள் உள்ளிட்டவை தொடர்பில் இக்குழுவினர் ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்யவுள்ளனர்.  

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தின் கரையோர வைத்தியசாலைகளில் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கிலேயே, இக்குழுவினர் வைத்தியசாலைகளுக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .