2021 மே 18, செவ்வாய்க்கிழமை

நிர்மாண பணிகளுக்கு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

Niroshini   / 2015 நவம்பர் 19 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நோயாளர் விடுதி நிர்மாண பணிகளுக்கு சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைஷல் காசிம் 4 கோடி 15 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

2013 தேசத்துக்கான மகுடம் நிதியில் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் விடுதிக் கட்டிடம் இதுவரையில் பூர்த்தியடையாமல் காணப்படுகின்றது.

இந்நிலையில், ஒக்டோபர் மாதம் இவ்வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார பிரதியமைச்சர் பைஷல் காசிமிடம் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாக வைத்த கோரிக்கைக்கமைவாகவே இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இவ் வைத்தியசாலையின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .