Suganthini Ratnam / 2015 நவம்பர் 26 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்
அக்கரைப்பற்று கல்வி வலய அதிபர்கள் சங்கத்தினால் நடத்தப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை தரம் -10 இஸ்லாம் பாட வினாத்தாளில் 15 க்கும் மேற்பட்ட வினாக்களில் எழுத்துப்பிழைகள் காணப்பட்ட நிலையில்; பரீட்சார்த்திகள் குழப்பமடைந்தனர்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கீழியங்கும் பாடசாலைகளுக்கு இறுதி ஆண்டுப் பரீட்சை நடத்தும் பொறுப்பை அக்கரைப்பற்று வலய அதிபர்கள் சங்கம் ஏற்று நடத்துவதாகக் கூறப்படுகின்றது.
இதன் பரீட்சை வினாத்தாளில் அதிகமான எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் காணப்பட்டதால்; மாணவர்கள் சிரமத்துக்குள்ளானதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இஸ்லாம் பாடம் தரம் -10, பகுதி –ஐ இல் 05ஆவது வினாவில் ஒரு முஸ்லிம் என்பதற்குப் பதிலாக ஒரு முஜ்லிம் எனவும் இஹ்லாஸ் என்பதற்குப் பதிலாக இல்லாஸ் எனவும் 06ஆவது வினாவில் தாறுல் ஃபனா என்பதற்குப் பதிலாக தாறுல் பனா எனவும் 07ஆவது வினாவில் தர்தீப் திலாவத் என்பதற்குப் பதிலாக தர்தீபுத் திலாவத் எனவும் 16ஆவது வினாவில் அலி (ரழி) என்பதற்குப் பதிலாக அலி (ரழ) எனவும் 21ஆவது வினாவில் நான்கு வௌ;வேறு இடங்களில் கலிபா என்பதற்குப் பதிலாக ஹலிபா எனவும் 28ஆவது வினாவில் உஷ்மான் (ரழி) என்பதற்கு பதிலாக உஷமான் (ரழி) எனவும் 36ஆவது வினாவில் உமர் (ரழி) என்பதற்குப் பதிலாக உமர் (ரழ) எனவும் காணப்பட்டன.
பகுதி –ஐஐ இல் 03ஆவது வினாவில் அபூபக்கர் (ரழி) என்பதற்குப் பதிலாக அபூவக்கர் (ரழ) எனவும் 07ஆவது வினாவில் குறிப்பிடுக என்பதற்குப் பதிலாக குறிபபிடுக எனவும் எழுத்துப்பிழைகளுடன் இவ்வினாப்பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே, அக்கரைப்பற்று கல்வி வலய அதிகாரிகளும் அதிபர்களும் புத்திஜீவிகளும் இதனைக் கவனத்திற்;கொள்ள வேண்டுமென்பதுடன், இவ்வாறான பிழைகள் இனியும் ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 minute ago
27 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
51 minute ago
1 hours ago