2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன் 

அம்பாறை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரியின் (தேசிய பாடசாலை)  பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக விசேட அங்குரார்ப்பண பொதுக்கூட்டம்,  அதிபர்   திருமதி  க.சோமபாலா   தலைமையில்  இடம்பெறவுள்ளது.

கடந்த பல வருடங்களாக மிகப்பெரும் குறைபாடாகக் காணப்பட்ட   பழைய மாணவர் சங்கம் இல்லாமையால் பாரிய வேலைகளை செய்யமுடியாமல் பாடசாலை சமூகம் மிகவும் சிரமத்தின் மத்தியில் செயற்பட்டு வருகின்றது

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு,  பழைய மாணவர்களை, எதிர்வரும் 24ஆம் திகதி திங்கடகிழமை பாடசாலை கேட்போர்  கூடத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம்,  சமூகத்துக்கும் பாடசாலைக்கும் இடையிலான உறவைக் கட்டியெழுப்பும் முகமாக புதிய நிர்வாக சபைத் தெரிவு, எதிர்கால நிகழ்வுகள், திட்டங்கள், பாடசாலையின் ஆரோக்கியமான அபிவிருத்திகள் உள்ளிட்ட விடையங்கள் தொடர்பாகவும்  கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளன.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பழைய மாணவர்கள் அனைவரது ஒத்துழைப்பையும்  வழங்குமாறும் சமூகமளிப்பவர்களின் பதிவை உறுதிப்படுத்த 077 37 49 633 அல்லது 0777 51 4279 எனும் அலைபேசி இலக்கத்துக்கு குறும்செய்தி அனுப்பிவைக்குமாறு,  ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--