2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பிராந்திய அபிவிருத்திக் கூட்டம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 02 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஜி.ஏ.கபூர்

அக்கரைப்பற்று பிராந்திய அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (02) அக்கரைப்பற்று பிரதேசச் செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.எம்.அபதுல் லெத்தீப் தலைமையில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளரின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விஷேட உரையாற்றினார். தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், வீதி மற்றும் வாhழ்வாதார உதவிகள் முதலிய அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் பற்றி மீளாய்வு செய்யப்பட்டதோடு, 2015ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் எதிர்நோக்கும் நிலப் பற்றாக்குறை முதலிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .