Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பாலமுனை விவசாயக் கல்லூரிக்கு 2017ஃ2018ஆம் ஆண்டுக்கான ஆங்கிலமொழி மூல விவசாய உற்பத்தி தொழில்நுட்பக் கல்வியின் ஒரு வருடகால தேசிய டிப்ளோமாக் கற்கைநெறிக்குப் புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி, விஞ்ஞானம், கணிதம் ஆகிய 03 படங்களில் திறமைச்சித்தியுடன் 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியும் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் ஏதாவது ஒரு பாடத்தில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.
17 வயது முதல் 25 வயது வரையான இரு பாலாரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர், விரிவாக்க மற்றும் பயிற்சிப்பிரிவு, விவசாயத் திணைக்களம், பேராதனை எனும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறும் பாலமுனை விவசாயக் கல்லூரி அதிபர் எம்.எப்.ஏ.சனீர் தெரிவித்தார்.
24 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
44 minute ago
2 hours ago