Suganthini Ratnam / 2016 ஜூலை 15 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
விவசாயச் செய்கைக்காக சேதனப்பசளை பாவனையை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களில் நேற்று வியாழக்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்டது.
உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தலைமையில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வு நிகழ்வின்போது, துண்டுப்பிர விநியோகமும் ஊர்வலமும் நடைபெற்றன.
சேதனப் பசளையின் முக்கியத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாக விவசாயப் போதனா ஆசிரியர்களால் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேசிய நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேற்கொள்ளும் பொருட்டு வயல்; நிலங்களுக்கு சேதனப் பசளையாக பாவிக்க வேண்டிய வைக்கோலை எரிப்பதால், நிலத்தில் சேதனப் பசளையின் தன்மை இல்லாமல் போகக்கூடிய நிலை ஏற்படும். இதனால் எதிர்காலத்தில் குறைந்த விளைச்சலை பெறக் கூடியதாக அமையும்.
வைக்கோலை வயலில் இட்டு உழுவதால் வைக்கோலிலுள்ள நைதரசன், பொட்டாசியம், பொஸ்பரஸ் போன்ற பதார்த்தங்கள் நிலத்தில் சேர்வதால் விளைச்சலை அதிகமாக பெற்றுக்கொள்வதோடு, வேளாண்மையின்போது ஏற்படக்கூடிய நோய்த்தாக்கமும் குறைவாக காணப்படும் என உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் தெரிவித்தார்.
கரையோர பிரதேசங்களில் வயல்களுக்கு சேதனப் பசளை இடுவது குறைந்து காணப்படுகின்றது. இதனை அதிகரிக்கச் செய்து நஞ்சற்ற போஷாக்கு நிறைந்த உணவுகளை உற்பத்தி செய்வதற்காக விவசாயிகள் மத்தியில் இவ்வாறான விழிப்புணர்வு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026