Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல். மப்றூக்)
அட்டாளைச்சேனை பிரதேச சபை சேகரிக்கும் குப்பை மற்றும் கழிவுகளை அப்பிரதேசத்தின் பாவங்காய் வீதியின் ஓரங்களில் கொட்டுவதை உடனடியாக நிறுத்துமாறும், வீதி ஓரங்களில் குப்பை கொட்டப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து உடனடியாக அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் தவிசாளருக்கு கடிதமொன்று அனுப்பியுள்ளதாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஜே.எம்.இர்சாத் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதற்கென பிரத்தியேகமானதொரு இடம் உள்ள போதும், அச்சபை குப்பைகளை பாவங்காய் வீதியின் ஓரங்களில் கொட்டி வருவதனால் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுளும் போக்குவரத்து இடையூறுகளும் ஏற்படுவதாக ஊடகங்கள் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தன.
இந்தப் பிரச்சினை குறித்து ஊடகங்கள் மூலமே தனக்குத் தெரிய வந்ததாகவும்,அதன் பின்னரே மேற்படி கடிதத்தினை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு தான் அனுப்பி வைத்ததாகவும் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் இர்சாத் கூறினார்.
குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதற்கென அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு யுனொப்ஸ் நிறுவனம் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் வேலைத் திட்டம் ஒன்றைச் செய்து கொடுத்துள்ள போதிலும், அப்பிரதேச சபை சேகரிக்கும் குப்பைகளை மேற்படி பாவங்காய் வீதியின் ஓரங்களில் கொட்டிவருவது குறித்தும் செய்திகள் வெளியாகியிருந்தன.
2 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
9 hours ago