Menaka Mookandi / 2010 நவம்பர் 02 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள சாகாமக்குள புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரனையுடன் ஜப்பான் அரசின் வாழ்வாதார அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள்த்தினால் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டத்துக்கு 18 ரூபா மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாண, கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் எம். எஸ்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், கௌரவ அதிதிகளாக மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ண ராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.செல்வராசா கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அலுவலக பிரதிநிதிகளும் அரச துரைசார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
யுத்த சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டு சுமார் முப்பது வருடங்களின் பின் புனரமைக்கப்படும் இந்த குளத்தின் ஊடாக பிரதேசத்திலுள்ள 950 ஏக்கர் நெற்காணிகளுக்கு நீர் கிடைக்க உள்ளதுடன் இப்பிரதேசத்திலுள்ள நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கலும் நன்மை பெற உள்ளதாக அறிய முடிகிறது.

24 minute ago
1 hours ago
2 hours ago
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
08 Nov 2025