2020 நவம்பர் 25, புதன்கிழமை

கல்முனை நடைபாதை வியாபாரிகளிடமிருந்து விற்பனைப் பொருட்கள் பொலிஸாரினால் பறிமுதல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 08 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை பிரதேசத்தில் நடைபாதையில் பொதுமக்களுக்கு  தடங்கல் ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த வியாபாரப் பொருட்களை நேற்று கல்முனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கல்முனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாகன விபத்துக்கள் தொடர்பில், நடைபாதை வியாபாரிகள் மீது கல்முனை பொலிஸில் முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நடைபாதைக்கு தடையை ஏற்படுத்தும் வகையில்  விற்பனைப் பொருட்களை வைத்திருந்த வர்த்தகர்களுக்கு கல்முனை பொலிஸார் பலமுறை அறிவுறுத்தல்களும் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

அதன் பின்னரும் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதகர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .