2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மூவின மாணவர்களுக்குமிடையில் பரஸ்பர உறவினை பலப்படுத்திக் கொள்ளும் வேலைத்திட்டம்

Super User   / 2010 நவம்பர் 11 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

சுற்றுப்புற சூழல் சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூக நல்லினக்கம் என்பவற்றை  இனங்களிடையே ஏற்படுத்தும்முகமாக மூவின மாணவர்களுக்குமான பரஸ்பர உறவினை பலப்படுத்திக் கொள்ளும் வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் கல்வி அமைச்சின் அனுசரணையோடு 'கெப்ஸ்ஓ' நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தின் 6 கல்வி வலய பிரிவுக்குட்பட்ட 60 பாடசாலைகளிலுள்ள மாணவர்களின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அடிப்படையில் தெய்யத்த கண்டி பிரதேசத்தை சேர்ந்த 10 பாடசாலைகளிலிருந்து 120 மாணவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மற்றும் கணேசா மகா வித்தியாலயம் ஆகியவற்றில்  இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் பீ.பிரபாகரன் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ. தௌபீக் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக கல்வி அதிகாரிகளும் 'கெப்ஸ்ஓ' நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--