2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மான் இறைச்சி விற்பனை செய்த நபர் கைது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தில் உலரவைத்த நிலையில் சட்டவிரோதமாக மான் இறைச்சி விற்பனை செய்த ஒருவரை பதியத்தலாவ பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.


சந்தேக நபர் நீண்ட நாட்களாக இவ்வாறு மான் இறைச்சி விற்பனையில்  ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே, மேற்படி நபரை பொலிஸார் கைதுசெய்தனர்.   


பதியத்தலாவ பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.பீ.மயூரசிங்கவின் பணிப்புரையின் பேரில்,  குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் மகேஸ் கங்கொட தலைமையிலான பொலிஸ் குழுவினர மேற்படி  நபரை கைதுசெய்தனர். இந்நிலையில்,  தெஹியத்தக்கண்டிய நீதவான் பீ.டபிள்யூ.எம்.என்.றுவந்திகா மாறப்பன முன்னிலையில் குறித்த நபரை ஆஜர்ப்படுத்தியபோது 30,000 ரூபாவினை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.


கைதுசெய்யப்படும்போது,  சந்தேக நபரிடம் 220 கிராம் உலரவைத்த மான் இறைச்சி கைவசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .