2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பெருநாள் காலங்களில் வாகனங்களை கவனமாகச் செலுத்துமாறு சாரதிகளுக்கு பணிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பெருநாள் காலங்களில் தங்கள் வாகனங்களை கவனமாகச் செலுத்தி விபத்துக்களை தவிர்க்குமாறு பொலிஸாரினால் சாரதிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.


காலத்துக்கு காலம் வரும் அனைத்து மதத்தவர்களினதும்  பெருநாள் காலங்களில் விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் இதனால், பெருநாள் காலங்களில் சாரதிகள் தங்களது வாகனங்களை கவனமாகச் செலுத்துமாறும்  அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. ரணகல தெரிவித்தார்.


அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் பொதுவாக பெருநாள் காலங்களில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இடம்பெறுகிறது. ஆகவே, சாரதிகள் தங்களது வாகனங்களை  போக்குவரத்து விதிகளுக்கமைய கவனமாகச் செலுத்தினால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதை   குறைக்க முடியும்மெனவும் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. ரணகல தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .