Super User / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை கிரிட் உப மின் நிலையத்தில் திருத்த வேலை காரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள 80 பிரதேசங்களில் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிநேர மின் விநியோக தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவிவித்துள்ளது.
இதன்படி அம்பாறை மின் பொறியியலாளர் பிரதேசத்திலுள்ள அம்பாறை, அக்கரைப்பற்று, திருக்கோவில், கல்மடுவ, ஹிங்குரான, தமன, இறக்காமம், பொத்தவில், பாணம, சியம்பலாண்டுவ, தொம்பககாவெல, கெமுனுபுர, சுதுவெல்ல, கொண்டவட்டுவான், பறகாகலே, ஹிமிதுராவ, கலஹிற்றியாகொட, நாமல்ஓயா, இங்கினியாகல, உகன, கொணாகொல்ல, பியங்கல, 69ஆம். சந்தி, தம்பிட்டிய, மகாஓயா, சேரங்கட, பதியத்தலாவ, நவகம்கொட, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரகொட, மத்தியமுகாம், 11ஆம் கொலனி, 13ஆம் கொலனி, 5ஆம்கொலனி, 17ஆம் கொலனி மற்றும் 21ஆம்கொலனி இடங்களில் மின் தடை ஏற்படும்.
இதேவேளை கல்முனை மின் பொறியியலாளர் பிரதேசத்திலுள்ள கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, மருதமுனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, நாவிதன்வெளி, சவளக்கடை, நற்பிட்டிமுனை, அன்னமலை, சொறிக்கல்முனை, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, அலவக்கரை, விளினையடி, உதயபுரம், சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு , சம்மாந்துறை புளக் ஜே மேற்கு, பௌஸி மாவத்தை, சம்புமடு, வீரமுனை, நெயினாகாடு, நிந்தவூர், அட்டப்பளம், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, மற்றும் அஷ்ரப் நகர் ஆகிய இடங்களிலும்
மட்டக்களப்பு மின் பொறியியலாளர் பிரதேசத்திலுள்ள மண்டூர், நவகம்புர, வெல்லாவெளி, போரதீவு, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, பட்டிருப்பு, கோட்டைக்கல்லாறு, குருக்கள்மடம், புதுக்குடியிருப்பு, காத்தான்குடி, அரசடித்தீவு மற்றும் மகிழடித்தீவு ஆகிய பிரதேசங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இடைநிறுத்திவைக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவிவித்துள்ளது.
5 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago