2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையின் கரையோரப் பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

மகாஓயா பிரதேசத்தின் மங்களகம கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் குருக்கல்மடம் எனும் இடத்தில் ஏற்பட்ட வீதி வெடிப்பாலும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

அவசர தேவை கருதி கூட பொதுமக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்றுமுன்தினம் மகாஓயா பிரதேசத்திலுள்ள மங்களகம இடத்திற்கு கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி வானில்; வந்த  அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--