2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பெண்களுக்கான சந்தை திறப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம். றம்ஸான்)

சாய்ந்தமருது பிரதேச ஜும்ஆ பள்ளிவாசலின் அனுசரணையுடன் பெண்களுக்கான சந்தை இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 30 வருடங்களாக சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கிவந்த பெண்களுக்கான சந்தை அண்மையில் வீதி விஸ்தரிப்பு பணிகளுக்காக அகற்றப்பட்டிருந்தது. இந்நிலையில்,  அந்த சந்தை அமைந்திருந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் சாய்ந்தமருது  ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று பெண்களுக்கான புதிய சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.சி.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கல்முனை மாநகரசபையின் பிரதிமேயர் ஏ.வஸீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0

  • jameel Friday, 18 February 2011 03:08 AM

    பெண் சந்தை என்றால் ஆண்களால் திறக்கப்பட வேண்டுமா? ஒரு பெண் கூட திறப்பு விழாவுக்கு வரவில்லையா? அல்லது பெயர் மட்டும்தானா?

    Reply : 0       0

    A. Naleem Saturday, 19 February 2011 03:08 AM

    ஐயோ இனி கணவன்மாருகிட்ட 5000/= நோட்டு வாங்கிட்டு போயி சூட மீனும் போயிலையும் வாங்கிட்டு வர வசதி செய்து கொடுத்திருக்காங்க நம்ம புத்தி ஜீவிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .