2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

Super User   / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தருமான யூ.எல். சுபைதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று இணைந்துகொண்டார்.

பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இவர் கட்சியின் அங்கத்தவராக இணைந்துகொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று மாநகர சபைக்கான  முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவர் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸிற்கு மாறிய நிலையிலேயே, தற்போது அதாவுல்லாவின் கட்சியைச் சேர்ந்த இவர் முஸ்லிம் காங்கிரஸிற்கு மாறியுள்ளார்.


  Comments - 0

 • mohammed Monday, 21 February 2011 01:11 PM

  நல்ல தருணம் தேசிய காங்கிரசுக்கு

  Reply : 0       0

  Jesi Tuesday, 22 February 2011 07:45 PM

  ஏங்க கருத்து போஸ்ட் பண்ணுபவரே...எங்க கருத்தையும் போஸ்ட் பண்ணுங்கள் .. காரமும் ..உப்பும் ... இருந்தால்தான்..குழம்பு .. நல்லாருக்கும்...

  Reply : 0       0

  hoh Tuesday, 22 February 2011 09:38 PM

  Who is this Subaideen? What is his back ground. He know's to write and Did he help to any body? Same as AKP people (O/L) qualification and telling as they study it people.

  Reply : 0       0

  rifas Friday, 25 February 2011 01:28 AM

  இவர்கள் கட்சி மாறுவது சுயநலத்துக்கே

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--