2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

'கொந்தளிப்பு' குறுங்காவியம் நூல் வெளியீட்டு விழா

Super User   / 2011 மார்ச் 04 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கலாபூஷண், கவிஞர் பாலமுனை பாறூக் எழுதிய 'கொந்தளிப்பு' குறுங்காவியம் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.00 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை, விளையாட்டு, தகவல் தொழில்நுட்ப, கூட்டுறவுத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல். அஸீஸ் கலந்துகொள்ளவுள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற ஏற்பாடாகியிருந்த இந்த நூல் வெளியீட்டு விழா, அப்போது நிலவிய பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை கலாசார பேரவை இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--