2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று, சின்னமுகத்துவாரப் பிரதேசத்தில் சட்டவிரோத கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை 620 கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கமகே ஜேதிரத்தின தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சின்னமுகத்துவார பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0

  • IBNU ABOO Wednesday, 22 June 2011 02:51 AM

    இந்த வியாபாரி இத்துடன் எத்தனை முறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு ஜெயிலுக்கு போய்வந்திருப்பார் என்பதை அறிய ஆவல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X