Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய ரக்பி விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவாகியுள்ள பாலமுனை ஹிக்மா வித்தியாலயத்தின் றக்பி அணியினருக்கான சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஐ.எம்.பாஹிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், மாவட்ட சாரண உதவி ஆணையாளருமான எஸ்.எல்.முனாஸ் தனது சொந்த நிதியிலிருந்து ரக்பி அணி வீரர்களுக்கு பரிசில்களையும் சீருடைகளையும் வழங்கிவைத்தார்.
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய றக்பி போட்டியில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் தெரிவாகியுள்ள மூன்று அணிகளில் பாலமுனை ஹிக்மா வித்தியாலய அணியும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago
சிறாஜ் Sunday, 16 October 2011 08:16 PM
சந்தோசமாக இருக்கிறது. கிழக்கு மாகாணத்திலேயே முதன் முதல் இப்பாடசாலைதான் றக்பியில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது என்னும் போது இச்செய்தியை இங்கு வழங்கியிருக்கும் தமிழ் மிரருக்கும் செய்தியாளருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply : 0 0
mohamed rinas Sunday, 16 October 2011 09:11 PM
பாலமுனை சார்பாக கலந்துகொண்டு மாகாண மட்ட போட்டியில் வெற்றி பெற்று எங்கள் ஊருக்கு பெருமை தேடி தந்த மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறோம்.
இவை அனைத்திற்கும் காரணமான பாயிஸ் ஆசிரியர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply : 0 0
Ansar,Addalaichenai Sunday, 16 October 2011 09:59 PM
அட்டளைச்சேனை பிரதேசம் விளையாட்டுதுறையில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு சகோதரர் முனாசின் பங்களிப்பு உறுதுணையாக உள்ளது , பாராட்டுக்கள் .
Reply : 0 0
சிறாஜ் Monday, 17 October 2011 05:33 AM
அன்சார் சொன்னது போன்று அட்டாளைச்சேனை என்னும் போது முழு பிரதேசத்திலும் முனாஸ் அவராலான நல்ல சேவையினையும் உதவியினையும் செய்கிறார். அவருக்கு பாராட்டுக்கள் அத்துடன் இப்பாலமுனை இத ரக்பிக்கு முழுக்காரணம் பாயிஸ் சேர் அத்துடன் பாஹிம் அதிபர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
mr harees Monday, 17 October 2011 07:36 PM
அட்டாளைச்சேனை பிரதேசசபையின் துடிப்பான உறுப்பினர் முனாசுக்கு வாழ்த்துக்கள்.
Reply : 0 0
kulathooran Monday, 17 October 2011 11:02 PM
கிழக்கு மாகாணத்திலிருந்து மூன்று பாடசாலைகள் தேசிய ரக்பி விளையாட்டில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டமை மகிழ்ச்சிக்குரியதே! அம்பாறை மாவட்ட பாடசாலை ஹிக்மாவின் வீரர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் திறமையை தேசிய ரீதியிலும் வெளிப்படுத்துங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago