2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
திருக்கோவில், கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பன விழிப்புணர்வு செயலமர்வு நேற்று புதன்கிழமை  வலயக்கல்வி பணிமனை கோட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யுனெப்ஸ் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி கணேசமூர்த்தி திலகவதி தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், யுனெப்ஸ் நிறவன திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டமுகாமையாளர் சீலியாமார்க்ஸ், இயலுமை விருத்தி செயற்பாட்டு முகாமையாளர் அனா சக்கரமண்டோ, ஆகியோர் கலந்து கொண்டு திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக
விளக்கமளித்தனர்

இச்செயலமர்வில், தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X