Super User / 2011 நவம்பர் 27 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்று மதியம் வரை மழையின்றி, வெயிலுடன் கூடிய காலநிலை நிலவியது. இதனால், மக்கள் தமது இயல்பு நடவடிக்கைக்குத் மீண்டும் திரும்பத் தொடங்கினர்.
ஆயினும், ஒலுவில் களியோடை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதோடு, அதிகளவு நீர் பாய்ந்து செல்வதையும் அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை மற்றும் திராய்க்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள வீதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் ஏற்பட்டிருந்த வெள்ளம் தற்போது வடிந்து வருகின்றது.
இதேவேளை, அம்பாறை கரையோரப் பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த நெல் வயல்கள் சிலவற்றில் முற்றாக நீர் வடிந்துள்ள போதும், சில நெற் காணிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், சில இடங்களில் நெற்பயிர்கள் அழுகியுள்ளமையை அவதானிக்க முடிந்தது. எவ்வாறிருப்பினும், மதியம் ஒரு மணிக்குப் பின்னர் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் சிறிய தூறலுடனான மழை பெய்யத் தொடங்கியதோடு, கால நிலை மீண்டும் மப்பும் மந்தாரமுமான நிலைமைக்கு மாறியுள்ளது.
இதேவேளை, நாவிதன்வெளி பிரதேசத்தையும் கல்முனை பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி பாலம் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதனால், 2,000இற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago