2021 ஜனவரி 27, புதன்கிழமை

டெங்கு நோய் விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் டொங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் துண்டுபிரசு விநியோகமும் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வெஸ்லி உயர் கல்லூரி மற்றும் கல்முனை ஸாஹீறா கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார சேவை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .