2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

முப்பெரும் விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் 2012ஆம் 2013 ஆம் வருடத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 25 மாணவர்களை  கௌரவிக்கும் நிகழ்வும் புனரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழாவும் அறுவடை நூல் வெளியீடும்   சம்மாந்துறை தேசிய பாடசாலையின் எம்.ஏ.அப்துல் மஜீட் ஆராதனை மண்டபத்தில் அதிபர் எச்.எம்.பாறுக் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன், சம்மாந்துறைப் பிரதேச சபையின் உறுப்பினரும் சிரேஷ்;ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா, வைத்திய அதிகாரி எம்.ரீ.இப்றாஹீம்,  மக்கள் வங்கியின் உதவி பிராந்திய முகாமையாளர் ஏ.அலியார், பன்னூலாசிரியரும் ஆய்வாளருமான அஷ்ஷேய்க் றவூப் செயின் நளீமி உட்பட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீலின் சொந்த நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுடன் பல்கலைக் கழகத்துக்கு வைத்திய பீடத்துக்கு தெரிவான 01 மாணவரும், பொறியியல் பீடத்துக்கு தெரிவான 02 மாணவர்களும், வர்த்தக முகாமைத்துவ கலைப்பீடங்களுக்கு தெரிவான 22 மாணவர்களும் நினைவுச் சின்னம் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாடசாலையினால் வெளியிடப்பட்ட அறுவடை நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது இதில் நூலின் முதல் பிரதியை பிரபல ஒலிபரப்பாளர் மனித நேயன் இர்ஷாட் ஏ.காதருக்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீலினால் வழங்கி வைத்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X