2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கல்முனை தமிழ், முஸ்லிம் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு

Menaka Mookandi   / 2014 ஜூலை 04 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா
 
கல்முனை நகர பிரதான பஸ் நிலையத்தில் தமிழ் முஸ்லிம் முச்சக்கர வண்டி உரிமையாளர்களிடேயே நிலவி வந்த சர்ச்சை மாநகர முதல்வரின் நேரடி தலையீட்டினால் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
 
கல்முனை நகர பிரதான பஸ் நிலையத்தில் தமிழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தொழில் உரிமை மறுக்கப்படுவதாக கூறப்படும் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று, நேற்று முன்தினம் (02) புதன்கிழமை மாலை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற போதே இந்த சர்ச்சை குறித்து விரிவாக ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்கிறது.
 
மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சிக்கன கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது சங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறினர்.
 
அதேவேளை தமிழ் தரப்பினரால் தம்மிடம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முதல்வர் இதன்போது சங்கப் பிரதிநிதிகளிடம் விளக்கம் கோரினார். இதன்போது இந்த குற்றச்சாட்டை மறுத்த சங்கப் பிரதிநிதிகள் அது தொடர்பான மேலதிக விபரங்களை எடுத்துரைத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து குறித்த சர்ச்சைக்கு தீர்வு காணும் பொருட்டு முதல்வரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், சங்கப் பிரதிநிதிகளினால் ஏற்றுக் கொல்லப்பட்டு அதன் பிரகாரம் செயற்படுவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.  
 
இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பதில் சட்ட அதிகாரி சட்டத்தரணி எம்.பி.எம்.பௌசான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
கல்முனை பஸ் நிலையத்தில் தமிழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தொழில் உரிமை மறுக்கப்படுவதாக அவர்கள் மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சகிதம் கடந்த வாரம் மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரை சந்தித்து முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .