Thipaan / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளராக இன்று திங்கட்கிழமை காலைநியமிக்கப்பட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர்கள் அமைச்சர் ஹக்கீமினால் இன்று நியமனம் செய்யப்பட்டனர். இதன்போதே சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பருக்கு மேற்படி பதவிக்கான நியமனம் கடிதம் அமைச்சரினால் வழங்கப்பட்டது.
இந்நியமனத்தின் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சார்பில் நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பொறுப்பான பணிப்பாளராக இவர் செயற்படுவார் என அறிவிக்கப்படுகிறது.

19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago