Freelancer / 2026 ஏப்ரல் 12 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் சென்றுள்ள, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசியுள்ளார்.
மேற்காசிய மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவும் ஈரானும் முன்வந்தமையை அடுத்து அதற்கான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான தூதுக்குழு நேற்று காலை இஸ்லாமாபாத் சென்றது. ஜே.டி.வான்ஸ் உடன் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உடன் சென்றனர்.
இந்தக் குழுவினர் நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது பாகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோர் உடன் இருந்தனர். இஸ்லாமாபாத்தின் செரீனா ஹோட்டலில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில்,
இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டைப் பாராட்டிய பிரதமர், இந்தப் பேச்சுவார்த்தைகள் இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நோக்கிய முன்னேற்றத்தை அடைவதில், இரு தரப்பினருக்கும் தொடர்ந்து உதவிகளை வழங்க பாகிஸ்தான் ஆவலுடன் காத்திருக்கிறது என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

31 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago