Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் உரிமையையும் அபிலாஷைகளையும் வென்;றெடுக்கும். வேறு எந்தக் கட்சியாலும் இவற்றை நிறைவேற்றமுடியாது என்று சர்வதேசம் அறிந்துகொள்ள எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறும் தேர்தல் களமாக அமையப்போகின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோ.கருணாகரம் தெரிவித்தார்
துறைநீலாவணையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நடைபெறப்போகும் பொதுத்தேர்தல் வட,கிழக்கு மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தல் ஏன் முக்கியம் என்றால், நாட்டில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கும் வரைக்கும் போராடிக்கொண்டிருந்தும் அந்தப்போராட்டம் மௌனிக்கப்பட்டு ஆறு வருடங்களுக்குப் பின்னர் இந்தத் தேர்தல் வந்து இருக்கின்றது
இந்த நாட்டை மாறி மாறி ஆண்டவர்கள் தமிழ் மக்களின் உரிமையை இன்னும் வழங்கவில்லை. அதனைப் பெறுவதற்கும் தமிழ் மக்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, தமிழர் பிரதிநிதித்துவத்தை மட்டக்களப்பில் குறைத்து வேற்று இனத்தவருக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்காக பல சக்திகள் எங்கள் மத்தியில் ஊடுருவி இருக்கின்றன.
இலங்கையிலே நடைபெறும் இந்த பொதுத்தேர்தலில் ஆகக் கூடுதலான கட்சிகளும் குழுக்களும் போட்டியிடும் மாவட்டமாக மட்டக்களப்பு இருக்கின்றது' என்றார்.
24 minute ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 Oct 2025