Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளக்காடு களியோடை ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை புதன்கிழமை (19) மாலை கைதுசெய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஆற்று மணல் அகழ்ந்து உழவு இயந்திரங்களில் ஏற்றிக்கொண்டிருந்த இந்த இருவரையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அக்கரைப்பற்று சாகாமம் விசேட அதிரடிப்படையினர் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று இருவரை கைதுசெய்ததுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
11 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
58 minute ago
1 hours ago