2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

நாவிதன்வெளி வீதி விஸ்தரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள 21 கடைகள்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

\

(அப்துல் அஸீஸ்)

நாவிதன்வெளி பிரதேசத்தின் மத்தியமுகாம் கிராம பிரதானவீதி விஸ்தரிப்பு நடவடிக்கையினால் 21 கடைக்கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்தியமுகாம் பிரதான வீதியை 50மீற்றர் அகலத்திற்கு விஸ்தரிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக வடிகான் அமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை வீதிக்கருகாமையிலிருந்த 21 கடைகள் மற்றும் ஏனைய அமைப்பு ரீதியான கட்டிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட இட உரிமையாளர்கள், தங்களுக்கு ஏதாவது பாதிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என கோறுகின்றனர்.

இதேவேளை, 'வீதி சட்டதிட்டங்களுக்கு புறம்பாக அமைக்கப்பட்ட இவ்வாறான இடங்களுக்கு நஷ்டஈட்டுக் கொடுப்பனவு எதுவும் வழங்க இயலாது' என  இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--