2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

Super User   / 2011 ஜனவரி 22 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரை 37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார மாப்பா தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட எந்தவோர் அரசியல் கட்சிகளும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.

சம்மாந்துறை மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளுக்கு ஆறு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

இம்மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, ஒரு நகர சபை உட்பட 17 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 182 உறுப்பினர்களை தெரிவு செய்ய 359,138 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--