2021 மார்ச் 03, புதன்கிழமை

அம்பாறையில் 1,588 பேர் இடைத்தங்கல் முகாம்களில்

Princiya Dixci   / 2021 ஜனவரி 17 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த 412 குடும்பங்களைச் சேர்ந்த 1,588 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ், இன்று (17) தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேரும், நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் 330 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 பேரும், கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் பிரிவில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 189 பேரும் இவ்வாறு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரென அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 2,339 குடும்பங்களைச் சேர்ந்த 7,401 பேரும், நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் 330 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 பேரும், காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேரும், அம்பாறை, மஹாஓயா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 02 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேருமாக மொத்தம் 2,701 குடும்பங்களைச் சேர்ந்த 8,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .