2020 மே 28, வியாழக்கிழமை

மீண்டும் ஒரே சூலில் மூன்று சிசுக்கள் பிரசவம்

Editorial   / 2020 மே 22 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை - கல்முனை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், கோமாரி பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணொருவர், ஒரே சூலில் 03 சிசுக்களை, நேற்று (21)  பிரசவித்துள்ளார். 

சத்திர சிகிச்சை மூலம் ஒரே சூலில் பெறப்பட்டுள்ளதுடன் 03 ஆண் சிசுக்களும் தாயும் நலமாக உள்ளனரென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிசுக்கள் தலா 1,800 கிராம்,  2,190 கிராம்,  2,240 கிராம் நிறையுடன் பிறந்துள்ளன. 

குறித்த சத்திர சிகிச்சையை மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ்  விதானகே தலைமையிலான வைத்தியக் குழுவினர் மேற்கொண்டனர்.

இதே வைத்தியசாலையில் கடந்த மாதமும் இதேபோன்று ஒரே சூலில் 03 சிசுக்களை, நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணொருவர் பிரசவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X