2020 நவம்பர் 28, சனிக்கிழமை

கல்முனை மேயரினால் இரு வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துவைப்பு

Super User   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இரு வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்திற்கான மலசலகூடம் மற்றும் உடையார் வீதிக்கான வடிகான் ஆகியன அமைப்பதற்கான  வேலைத்திட்டங்களுக்கு மேயர் அடிக்கல் நாட்டி ஆரம்பித்துவைத்தார்.

சந்தாங்கேணி மைதானத்தில் மலசலகூடம் இன்மையினால் விளையாட்டு வீரர்கள் பெரும் அசௌகரிகங்களுக்கு உள்ளாவதனை விளையாட்டு கழகங்களும் கடந்த அடை மழையின்போது குறித்த வீதி வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டதை நேரில் மேயர் சென்று பார்வையிட்டபோது மக்களினாலும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து மலசலகூடம் அமைப்பதற்கான நிதி மாநகர சபையினாலும் வடிகான் அமைப்பதற்கான நிதி ஆசிய மன்றத்தின் ஒதுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

 • meenavan Monday, 11 February 2013 05:18 PM

  சந்தாங்கேணி மைதான மலசல கூட அடிக்கல் நாட்டும் மேயர் அவர்களே, அம்மைதானம் தனி நபர் ஒருவரினால் எல்லை வேலி நகர்த்தப்பட்டு மைதான விஸ்தீரனம் குறுக்கபடுவது பற்றியும் சற்று அக்கறை கொள்ளுங்கள்.

  Reply : 0       0

  mbm Tuesday, 12 February 2013 06:31 AM

  அறிக்கை அரசியல் வாதி நம்மட முபாரக் மௌலவி எப்பவும் அடுத்தவண்ட குறைய கண்டுபுடிச்சி பேப்பர்ல அறிக்கை விடுவாரே தவிர அவர் ஒன்றும் கிழிக்க மாட்டார். அந்த பக்கம் நம்மட mp தம்பி ஹரீஸ் தானும் செய்யுறது இல்ல செயுரவனையும் விடுறதில்லை. இந்த வைக்கோல் கந்துக்குள்ள...... கேட்டால் மட்டும் நான் செய்யாத அபிவிருத்தி என்னென்ன இருக்கு என்று அதுக்கு ஒரு உருப்படாத லிஸ்ட் வேற. இந்த அறிக்கை அரசியல்வாதியையும் அட்டு அரசியல்வாதியையும் அவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களையும் துரத்தி விட்டு எப்ப எவன் என்னத்த கொண்டாந்தாலும் அதை நாம்ம வாங்கி எடுக்கிறோமோ அன்றைக்குத்தான் இந்த ஊருக்கு அபிவிருத்தி. குறைந்தது இவனுகள் இருக்குற ரோட்டை கூட போட நாதியற்ற அபிவிருத்தி குழு தலைவர்.
  முதல்ல மக்கள் திருந்தனும்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .