Freelancer / 2026 மார்ச் 19 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதச்சார்பற்ற கொள்கையில் த.வெ.க. உறுதியாக உள்ளது. த.வெ.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம். எந்தக் கூட்டணியிலும் த.வெ.க இல்லை என்று அக்கட்சியில் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய் நேற்று (18) இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து, பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி என பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்கள். த.வெ.க. எந்த அணியிலும் இல்லை. மக்கள் அணியில் தான் இருக்கிறது என தெரிந்ததும் வேறு என்ன அவதூறு பரப்பலாம் என யோசித்தனர்.
த.வெ.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம். மதச்சார்பற்ற கொள்கை, மற்றும் மதச்சார்பற்ற சமூக நீதியில் த.வெ.க. உறுதியாக உள்ளது. அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்தவித சமரசமமும் வைத்துக்கொள்ள போவதில்லை. இது குறித்த பேச்சுகே இடமில்லை. யார் என்ன அவதூறு பரப்பினாலும், அதை நம்ப வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த இலக்கை அடைய முடியும் என்று அவர் தெரிவித்தார். (a)

2 hours ago
5 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
18 Mar 2026