2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினருக்கும் கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூருக்குமிடையில்; வைத்தியசாலை அபிவிருத்திச் சம்பந்தமான கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (19) அமைச்சரின் சம்மாந்துறை வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் சார்பில் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் அதன் செயலாளர் றியாத் ஏ.மஜீத், உபதலைவர் எம்.ஆதம், பொருளாளர் ஐ.எல்.ஏ.றாசிக், உறுப்பினர் நௌபர் ஏ.பாவா உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்;பில் கலந்துகொண்டனர்.

இதன்போது வைத்தியசாலை அபிவிருத்தி சபையினரால் வைத்தியசாலையின் தேவையாகவுள்ள வெளிநோயாளர் பிரிவை விஸ்தரிப்பு செய்தல், சிற்றூண்டிச்சாலை நிர்மாணித்தல், விடுதிகளுக்கான திருத்த வேலைகள் மற்றும் இரத்தப் பரிசோதனை இயந்திரம் பெற்றுக்கொள்ளல் போன்ற கோரிக்கைகள் மகஜராக  கையளிக்கப்பட்டது.

இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மன்சூர், இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து உடன் நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளதாக வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் மன்சூரை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .