Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜனவரி 25 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்திருப்பது ஒரு புதிய நிலைமை அல்ல எனவும் இதற்கு முன்னரும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபின்னர் குடாநாட்டில் வன்முறைகள் அதிகரிப்பது வழக்கமாக இருந்ததெனவும் மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் கூறுகிறார்.
தமிழ்மிரரின் 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
'யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோதெல்லாம் யாழ். குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்திருந்ததை அவதானித்துள்ளோம். யாழ். மாநகரசபைத் தேர்தல் நடைபெற்ற சமயத்திலும் இவ்வாறான நிலைமை இருந்தது' என அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்; தரப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள முன்னாள் ஆயுதபாணிகள், படையிலுள்ள முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஆதரவானவர்கள், வெளிநாடுகளிலுள்ள புலிகளின் கட்டமைப்புகள் என பல்வேறு தரப்பினர் மீதான குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டிய அவர், எவ்வாறெனினும் இச்சம்பவங்களுக்கு காரணமானவர்களை இனங்கண்டு அதை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறினால் அரசாங்கத்தின் மீதே சந்தேகப் பார்வை இருக்கும் எனக் கூறினார்.
இவ்வன்முறைகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய விடயங்கள், இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளின் புதிய நிலைமை, தமிழ் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கம், ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் போன்ற பல விடயங்கள் குறித்து என். வித்தியாதரன் தெரிவித்த கருத்துக்களை 'அரசியல் அலசல்' காணொளியில் காணலாம்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago