Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லி முதல்வராக எதிர்வரும் 16ஆம் திகதி அர்விந்த் கேஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பதவியேற்கிறார். அவர் முதல்வர் பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும்.
கடந்த 8 ஆம் திகதி 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளைக் கைப்பற்றி அசுர பலத்துடன் அபார வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 8 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.
முதன்முதலில் கேஜ்ரிவால் கடந்த 2013 பெப்ரவரியில் டெல்லியின் 7வது முதல்வராகப் பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 45. டெல்லியில் ஆட்சி செய்த முதல்வர் களில் கேஜ்ரிவாலே வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பதவியேற்பு விழாவும் ராம் லீலா மைதானத்தில் தான் நடந்தது. ஆனால், அவரது முதல்வர் பதவி அந்தமுறை வெறும் 49 நாள்களே நீடித்தது.
அதன்பின்னர் 2015இல் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் மக்களைத் தேர்தல் களத்தில் சந்தித்தார். அத்தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களைக் கைப்பற்றியது.
தற்போது 2020இல் ஆட்சியைப் பிடித்து மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற குழு கூட்டத்துக்குப் பின்னர் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்திப்பதற்காக கேஜ்ரிவால் ராஜ் நிவாஸ் சென்றிருக்கிறார்.
55 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
3 hours ago