2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தட்டிக்கேட்ட காவலாளியை கொலை செய்ய முயற்சி

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 19 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை,

புனே மாவட்டம் பொய்சர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சங்கர் வேபால்கர்(வயது41) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.   அவர் நிறுவனத்தின் முன் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தார். மதியம் 1 மணியளவில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று சென்றது. திடீரென ஆட்டோவை நிறுத்திய  சாரதி மகேந்திர பாலு கதம்(31) அங்கு நிறுத்தப்பட்டு இருந்த நிறுவன உரிமையாளரின் விலை உயர்ந்த கார் மீது சிறுநீர் கழித்தார்.

இதைக்கண்ட  காவலாளி, ஆட்டோ சாரதியை கண்டித்தார். மேலும் வேறு இடத்தில் சிறுநீர் கழிக்குமாறு ஆட்டோ சாரதியை துரத்திவிட்டார். இது ஆட்டோ சாரதிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் ஆட்டோ சாரதி பெற்ரோல் போத்தலுடன் அங்கு வந்தார். அவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் காவலாளி மீது பெற்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் உடலில் தீப்பிடித்து காவலாளி அலறித் துடித்தார். அங்கு இருந்தவர்கள் காவலாளியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த  எம்.ஐ.டி.சி. பொலிஸார்ஆட்டோ சாரதி மகேந்திரபாலுவைக்   கைது செய்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .