A.K.M. Ramzy / 2021 மார்ச் 04 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி இன்று (மார்ச் 4)88வது வயதில் காலமானார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தினமலர் நாளிதழ் ஆசிரியராக சிறப்புடன் பணியாற்றினார்.
தமிழகத்தின் தென்கோடியான குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடீவீஸ்வரம் என்ற கிராமத்தில் 18.01.1933ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஸ்ரீ டி.வி.ராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பேற்ற இவர், தினமலர் நாளிதழை மிக உயர்ந்த இடத்துக்கு கொண்டு வந்தார். திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, புதுச்சேரி, வேலூர், நாகர்கோவில் நகரங்களில் தினமலர் பதிப்புகளை துவக்க காரணமாக இருந்தார். 2017 வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025