Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி நேற்றுக் காணொளிக் காட்சி (வீடியோ கொன்பரன்சிங்) மூலம் நாடு முழுவதும் உள்ள 23 முக்கிய பத்திரிகை ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
கொவிட் -19 பரவிவரும் நிலையில், பத்திரிகைகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்ற நோக்கில் அவர் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதில் தைனிக் பாஸ்கர் பத்திரிகை சார்பில் சுஜித் அகர்வால், ‘தினத்தந்தி’ சார்பில் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலை மலர்’ இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன், ‘தந்தி’ டி.வி. இயக்குநர் பா.ஆதவன் ஆதித்தன், இந்து பத்திரிகை சார்பில் மாலினி பார்த்த சாரதி, என்.ரவி, தினமலர் சார்பில் கே.ராமசுப்பு, ஆந்திர ஜோதி சார்பில்
ராதாகிருஷ்ணன், ஈநாடு சார்பில் ராமோஜி ராவ், ராஜஸ்தான் பத்திரிகா சார்பில் குலாப் கோத்தாரி, மலையாள மனோரமா சார்பில் மாம்மேன் மேத்யூஸ், ஜெயந்த்
மேத்யூஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் விவேக் கோயங்கா, ஆனந்த் கோயங்கா, லோக் மத் சார்பில் ரிஷி டார்டா, விஜாவாணி சார்பில் ஆனந்த் சங்கேஷ்வர், தாரித்திரி சார்பில் ததகதா, சதபதி, சம்பாட் சார்பில் சவுமியா ரஞ்சன், பட்நாயக்,
சமாஜ் சார்பில் சுஜந்தா மொகந்தி, பஞ்சாப் கேசரி சார்பில் அவினாஷ் சோப்ரா, சங்கத் பிரதிதின் சார்பில் ஸ்ரீஞ்ஜாய் போஸ், சகால் சார்பில் அபிஜித் பவார், டைம்ஸ் ஓப் இந்தியா சார்பில் ஜெய்திப் போஸ், பி.டி.ஐ. சார்பில் விஜய் ஜோஷி, டைனிக்
ஜாகரான் சார்பில் சஞ்சய் குப்தா, இந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் ஷோபனா பாரதியா, நவபாரத் டைம்ஸ் சார்பில் முஹம்மது நதீம், அமர் உஜாலா சார்பில் ராஜூல் மகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் பேசியவுடன், சில பத்திரிகை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர்.
‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர் பேசத்தொடங்கியபோது, வணக்கம் என்று தமிழில் கூறினார்.
உடனே பிரதமரும் வணக்கம்... வணக்கம்... பாலா என்று தமிழில் கூறி வணக்கம் தெரிவித்தார்.
இதேநேரம் அழைக்கப்பட்ட சகல பத்திரிகையாளர்களுடனும் பிரதமரும் வணக்கம்... வணக்கம்... எனத் தெரிவித்தாக தெரிவிக்கப்படுகிறது.
37 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
56 minute ago
2 hours ago