Gavitha / 2021 ஜனவரி 20 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனவரி, 27ஆம் திகதி காலை 10 மணியளவில், சசிகலா விடுதலை செய்யப்படுவார் என, கர்நாடகா சிறைத்துறை, உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைத் தவிர மீதமுள்ள 3 பேரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், சசிகலாவின் தண்டனைக் காலம் நிறைவுபெறவுள்ளதையடுத்து, அவர் 27ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 hours ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
11 Jan 2026