Editorial / 2019 நவம்பர் 05 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது சசிகலா 1,500 கோடி இந்திய ரூபாய்க்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் திகதி திடீரென 500, 1,000 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்று அதிரடி அறிவிப்பை மத்திய அரசாங்கம் வெளியிட்டது.
500, 1,000 ரூபாய்த் தாள்களை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசம் வழங்கப்பட்டது. 50 நாட்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களிடம் இருந்த 500 ரூபாய், 1,000 ரூபாய்த் தாள்களை மாற்றிக் கொண்டனர்.
அந்தக் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன்னிடம் இருந்த 500 ரூபாய், 1,000 ரூபாய்த் தாள்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கியதாகக் கூறப்படுகிறது. சுமார் 1,500 கோடி இந்திய ரூபாய்க்குய் அவர் அப்போது சொத்துக்களை வாங்கி குவித்ததாக தெரிகிறது.
அந்த சொத்துக்கள் அனைத்தும் நிறுவனங்களாக வாங்கப்பட்டது. அந்த நிறுவனங்களை சசிகலா தனது பெயரிலோ அல்லது தனது குடும்பத்தினர் பெயரிலோ பதிவு செய்து மாற்றம் செய்து கொள்ளவில்லை. அதற்கு பதில் அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதித்தார். ஆனால் அந்த நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சசிகலா மொத்தம் ஏழு நிறுவனங்களை அப்படி வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் பல்பொருள் அங்காடி, கோவையில் செந்தில் கடதாசி நிறுவனம், கோவையில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜுவல்லரி, புதுச்சேரியில் உள்ள விடுதி ஆகியவை சசிகலா வாங்கிய நிறுவனங்களில் அடங்கும் என்று தெரிகிறது.
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது ஜெயலலிதா அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago