2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (09.11.2012)

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (09.11.2012)

மேடம்
குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
அஸ்வினி : பயம்
பரணி : துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துக்கம்


இடபம்
உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் மனவேதனையைக் கொடுப்பார்கள். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உடல் நலம் பாதிப்படையும்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி : குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: கஷ்டம்


மிதுனம்
இல்லத்தில் சுப செலவுகள் உண்டாகும். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் உண்டாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: ஆர்வம்
புனர்பூசம்: மகிழ்ச்சி


கடகம்
நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. பண விடயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.
புனர்பூசம் : துன்பம்
பூசம் : துக்கம்
ஆயில்யம் : பயம்


சிம்மம்
எந்த சூழலிலும் உங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டாம். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகமாகும்.
மகம்: துக்கம்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: அலைச்சல்


கன்னி
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்;கள் கையெழுத்தாகும். பணத்தட்டுப்பாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் அமைதியான போக்குகள் காணப்படும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்


துலாம்
குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புக்கள் நீங்கும். பயணங்கள் அலைச்சல் உடையதாகவே அமையும். யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி : அலைச்சல்
விசாகம் 1, 2, 3: துக்கம்


விருட்சிகம்
வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
விசாகம் 4: பிரச்சினை
அனுசம்: அலைச்சல்
கேட்டை: சிக்கனம்


தனுசு
விழிப்புணர்வுடன் இருப்பதால் சில இழப்புக்களைத் தவிர்க்கலாம். பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு உதவி செய்து அதில் திருப்தி காண்பீர்கள்.
மூலம்: துக்கம்
பூராடம்: தோல்வி
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்மகரம்
மாற்றுத் தொழிலில் கவனம் செலுத்தி லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி வெற்றி கொள்வீர்கள். பெண்களுக்கு தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: அலைச்சல்


கும்பம்
மகிழ்ச்சியான செய்தி மற்றும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும், தனலாபம் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்


மீனம்
நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். அதிக பணலாபம் உண்டாகும். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி : லாபம்
ரேவதி : மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .