2026 மார்ச் 21, சனிக்கிழமை

அமெரிக்கா - ஈரான் போரில் மேலும் ஓர் இந்தியர் உயிரிழப்பு

Freelancer   / 2026 மார்ச் 21 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் ஈரான் தாக்​குதலில் இந்​தி​யர் ஒரு​வர் உயி​ரிழந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா - ஈரான் போரில் வளை​கு​டா​வில் உயி​ரிழந்த இந்​தி​யர் எண்​ணிக்கை 6 ஆக உயர்ந்​துள்​ளது.

இது தொடர்​பாக இந்திய வெளி​யுறவு அமைச்சக கூடு​தல் செய​லா​ளர் (வளை​கு​டா) அசீம் மகாஜன் நேற்று டில்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் கருத்து தெரிவிக்கையில்,

மேற்கு ஆசிய போரில் சவூதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் கடந்த 18 ஆம் திகதி இந்​தி​யர் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இது வியாழக்​கிழமை நள்​ளிரவு உறுதி செய்​யப்​பட்​டது. மேற்கு ஆசிய போரில் இது​வரை 6 இந்​தி​யர்​கள் இறந்​துள்​ளனர். ஒரு​வரை காண​வில்​லை. இந்​தி​யர் காணா​மல்​போனது தொடர்​பாக​வும் இறந்​தவர்​களின் உடல்​களை இந்​தி​யா​வுக்கு விரைந்து அனுப்பி வைப்​பது தொடர்​பாக​வும் சவூதி அரேபி​யா, ஓமன், ஈராக் மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள இந்​திய தூதரகங்​கள் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களு​டன் தொடர்​பில் இருந்து வரு​கின்​றனர்.

இராக்​கில் எம்​.டி. சேஃப்சீ எண்​ணெய் கப்​பலில் இருந்து மீட்​கப்​பட்ட 15 இந்​திய ஊழியர்​கள் சவூதி அரேபியா வழி​யாக இந்​தியா வரு​கின்​றனர். ஏற்​கெனவே இரு கப்​பல்​களில் இருந்து மீட்​கப்​பட்ட 25 இந்​திய ஊழியர்​கள் ஓமன் வழி​யாக இந்​தியா திரும்பி விட்​டனர். வளை​குடா பிராந்​தி​யத்​தில் இருந்து கடந்த பெப்​ர​வரி 28 முதல் சுமார் 3 லட்​சம் பயணி​கள் இந்​தியா திரும்​பி​யுள்​ளனர் என்று அவர்​ கூறி​னார்​. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X