Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (04.02.2015)
மேடம்
உறவினர்களின் இல்லத்து நிகழ்வுகளில் பங்கு கொள்வீர்கள். தளர்வடைந்த செயல்களுக்குத் தக்க நபர்களின் உதவியை நாடுவீர்கள். பணிகளில் உங்களுடைய ஒத்துழைப்பு சிறப்புடையதாக இருக்கும்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு பெருமையை தேடித்தரும். எந்த ஒரு சிறு விஷயத்தையும் அலட்சியபடுத்தாமல் இருப்பது நல்லது. வாகனத்தினால் யோகம் உண்டாகும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: கவனம்
மிதுனம்
அதிக வேலைகளால் பெண்களுக்கு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம். பணிகளில் முனைப்போடு செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அதன் மூலம் பணவரவும் புகழும் ஏற்படக்கூடும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம் : இன்பம்
கடகம்
பெண்கள்அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பதால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சுப செலவுகள் கூடுதலாக இருக்கும். சமாளித்து விடுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளில் கவனம் தேவை.
புனர்பூசம்: கஷ்டம்
பூசம் : அலைச்சல்
ஆயில்யம்: துக்கம்
சிம்மம்
புதிய திட்டங்கள் அனைத்தும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். பணிசுமையில் இருந்து சிறிது விடுபடுவீர்கள்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இனபம்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்
கன்னி
அனாவசியமாக மற்றவர்களது பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. அனாவசிய செலவுகளைத் தவிர்பது நல்லது. வியாபார விஷயங்களில் மிகவும் கவனம் தேவை.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: துக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
துலாம்
உறவினர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் போகலாம். உடலில் சிறிது காயங்கள் ஏற்படும். வீணான மனசங்கடங்கள் உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3: கஷ்டம்
விருட்சிகம்
தேவையில்லாத வீண் பேச்சுக்களைத் தவிர்கவும். எந்த ஒரு பிரச்சனைக்கும் முன்னிற்பதைத் தவிர்க்கவும். ஒரு சில விஷயங்களில் அலைச்சல்கள் காணப்படும்.
விசாகம் 4: செலவுகள்
அனுசம்: இன்பம்
கேட்டை: அலைச்சல்
தனுசு
இல்லம் தேடி மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சில புதிய தொடர்புகளினால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபார முன்னேற்றம் காணப்படும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: லாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்
மகரம்
உணவு விஷயத்தில் கவனம் தேவை. தேவையில்லாத மருத்துவ செலவுகள் காணப்படும். எந்த ஒரு விஷயத்தையும் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உத்திராடம் 2, 3, 4: கஷ்டம்
திருவோணம்: வெறுப்பு
அவிட்டம் 1, 2: துன்பம்
கும்பம்
புதிய முயற்ச்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. திடீர் நஷ்டங்கள் மூலம் மனது சோர்வடையும். மனதில் சில தேவையில்லாத எண்ணங்கள் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம் : அலைச்சல்
பூரட்டாதி 1, 2, 3: தவறுகள்
மீனம்
எதிர்கால நலன் குறித்து செயல்களில் அக்கறை கொள்வீர்கள். உடல் மற்றும் மனநிலையில் புத்துணர்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சியில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
பூரட்டாதி 4: லாபம்
உத்திரட்டாதி : இன்பம், தோல்வி
ரேவதி : சுபம்
7 minute ago
14 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
18 minute ago
19 minute ago