2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (22.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (22.06.2011)

இன்று கர வருடம் ஆனி மாதம் 07ஆம் நாள் (22.06.2011) புதன்கிழமை. சித்த மேல் அமிர்தயோகமும் ஸப்தமி திதியும் சதயம் நட்சத்திரம் காலை 07.47 மணிவரை, பின்பு பூரட்டாதி.

இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணிவரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 1.30 மணிவரை.

இன்று சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை.

மேடம்
வியாபார திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, புதிய காரியங்களில் தடைகள் ஏற்படுதல்.
அஸ்வினி: சோர்வு
பரணி: விருப்பமின்மை
கிருத்திகை 1ஆம் பாதம்: தோல்வி


இடபம்
உரிய பணவரவுகள் தாமதமின்றி கிடைக்கும், அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் செயல்படவும், மனதில் சிறு சலனங்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: நிதானம்
ரோகிணி: லாபம்
மிருகசீரிடம் 1, 2: துன்பம்


மிதுனம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தீயவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், புதிய முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
மிருகசீரிடம் 2, 3: நாவடக்கம்
திருவாதிரை: சங்கடம்
புனர்பூசம்: அவதானம்


கடகம்
ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம், புதிய செய்திகள் மகிழ்ச்சி தரும், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: ஆரோக்கியம்
ஆயில்யம்: தகவல்


சிம்மம்
வியாபாரத்தில் நவீன முயற்சிகள், புதிய காரியங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மகம்: விருப்பமின்மை
பூரம்: பின்னடைவு
உத்திரம் 1ஆம் பாதம்: களைப்பு


கன்னி
பணப் பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், பிறரின் ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: சிரமம்
அஸ்தம்: நஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சலுகை


துலாம்
அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும், புதிய முயற்சிகளில் தாமதம், அறிமுகமற்ற நண்பர்களினால் சிக்கல்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நிம்மதியின்மை
சுவாதி: விரயம்
விசாகம் 1, 2, 3: பகை


விருட்சிகம்
பெண்கள் தமது கடமையை சரிவர செய்தல், மேல் அதிகாரிகளுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், நட்பு வட்டம் விரிவடைதல்.
விசாகம் 4: பொறுமை
அனுசம்: ஒற்றுமை
கேட்டை: அக்கறை


தனுசு
தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும், ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல்.
மூலம்: செலவு
பூராடம்: தேகசும்
உத்திராடம் 1ஆம் பாதம்: தடைகள்


மகரம்
பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், புதிய செய்திகள் வந்து சேரும்.
உத்திராடம் 2, 3, 4: சிக்கல்
திருவோணம்: தகவல்
அவிட்டம் 1, 2: முயற்சி


கும்பம்
வரவு குறைந்து செலவுகள் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், உடல் சோர்வுகள் ஏற்படும். 
அவிட்டம் 3, 4: செலவு
சதயம்: நலன் பாதிப்பு
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி


மீனம்
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
பூரட்டாதி 4: குடும்ப மகிழ்ச்சி
உத்திரட்டாதி: ஆகாரம்
ரேவதி: முன்னேற்றம்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X